• Download mobile app
02 Dec 2020, WednesdayEdition - 1757
FLASH NEWS
 • டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு!
 • “சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும்” – மு.க. அழகிரி
 • தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது !
 • தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது!
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது!
 • சென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
 • மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
 • தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
 • 6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு
 • மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி
 • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
 • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
 • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
 • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
 • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
 • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
 • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
 • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
 • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
 • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவில்

February 22, 2017 findmytemple.com

சுவாமி : ரங்கநாத பெருமாள்.

அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.

தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி , தென் பெண்ணைநதி.

தலவிருட்சம் : புன்னாக மரம்.

விமானம் : சந்தோமய விமானம்.

தலச்சிறப்பு :

திவ்ய தேசம் 108 கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவைகள் அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம். ஏன் என்றால் ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. ஆதி திருவரங்கம் அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அணைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் “பெரிய பெருமாள்” என அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு :

அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன் மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான். அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது. பூவுலகையும், தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும். முனிவர்களும், தேவர்களும் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறே பூவுலகம், தேவலோகம் எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு சேவை செய்யுமாறு பணித்தான்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவை சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து சென்று விட்டான். பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருப்பாற்கடல் சென்று ஸ்ரீமன் நாராயணனை வணங்கி சோமுகனை வதம் செய்து தங்களை காத்தருளுமாறு வேண்டினார். நாராயணனும் சோமுகனை வதம் செய்ய சென்றார். இருவருக்கும் மிகப்பெரிய அளவில் போர் நடந்தது. சோமுகன் தனது எல்லா மாயாஜாலங்களையும் காட்டி போர் புரிந்து சோர்ந்து விட்டான். இனி இருந்தால் நாராயணன் அழித்து விடுவான் என எண்ணி கடலுக்கு அடியில் சென்று பதுங்கி விட்டான்.

ஸ்ரீமன் நாராயணன் அழியா வரம் பெற்ற சோமுகனை மத்ஸ்ய அவதாரமெடுத்து கடலுக்கு அடியில் சென்று வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டு வந்தார். மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை உத்தரங்கம் எனும் இந்த இடத்தில் மீண்டும் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார். தேவர்களும், முனிவர்களும் மனம் மகிழ்ந்து ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார்கள்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி.

அருகிலுள்ள நகரம் : விழுப்புரம்.

கோயில் முகவரி : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில்,ஆதி திருவரங்கம் – 605 802, விழுப்புரம் மாவட்டம்.

மேலும் படிக்க