October 21, 2026
தண்டோரா குழு
பண்டிகைக் காலம் என்றாலே வீடுகளெங்கும் வரிசையாக ஜொலிக்கும் அகல் விளக்குகளும், கண் சிமிட்டும் அலங்கார விளக்குகளும்தான் திருவிழா களைகட்டக் காரணமே!
அப்படிப்பட்ட பண்டிகைக் கால ஒளியின் மேஜிக்கை அப்படியே நகைகளில் வடித்தெடுத்து, பெண்களின் மனதை அள்ள வந்திருக்கிறது பிரபல பிராண்டான ‘மிஆ பை தனிஷ்க்’ ’லைட்ஸ்கேப்ஸ்’ அறிமுகம் குறித்து மிஆ பை தனிஷ்க் நிறுவனத்தின் வணிகப்பிரிவுத் தலைவர் ஷியாமளா ரமணன் தெரிவிக்கையில், ‘லைட்ஸ்கேப்ஸ்’ என்ற அட்டகாசமான பெயரில் களமிறங்கியுள்ள இந்த புதிய நகைத் தொகுப்பில், 230-க்கும் மேற்பட்ட லேட்டஸ்ட் டிசைன்கள் இடம்பெற்றுள்ளன.
தங்க நகைகள், இயற்கை வைரங்கள் மற்றும் பளபளக்கும் வண்ணக் கற்கள் என ஒவ்வொன்றிலும் மிஆ-வின் கைவினை நேர்த்தியும், மாடர்ன் ஸ்டைலும் கைகோர்த்துள்ளன.விழாக்களில் நீங்கள் மட்டும்தான் ஸ்பெஷலாக மின்ன வேண்டும் என்பதற்காகவே ஒளியின் அத்தனை அழகையும் இந்த நகைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது மிஆ. மேலிருந்து அருவி போலக் கொட்டும் சரவிளக்குகளின் அழகு, தண்ணீரில் சலசலக்கும் விளக்குகளின் பிம்பம், காற்றில் நடனமாடும் தீபச்சுடர்கள் என ஒளியின் அத்தனை கண்கொள்ளாக் காட்சிகளையும் அப்படியே சுடச்சுட எடுத்து இந்த ‘லைட்ஸ்கேப்ஸ்’ கலெக்ஷனில் நவீன நகைகளாக வார்த்தெடுத்துள்ளனர்.
இந்த லைட்ஸ்கேப்ஸ் நகைகளில் பெரும்பாலானவை ரூ.50,000-க்குள் அடங்குவதுதான் மிகப்பெரிய ஹைலைட். 9 கேடி மற்றும் 14 கேடி தங்கத்தில் க்யூட்டான ஜிமிக்கிகள், காதில் ஆடும் டாங்கிளர்கள், நச்சென்ற நெக்லஸ்கள், பெண்டன்ட்கள், மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள் என எல்லாமே இதில் கொட்டிக்கிடக்கின்றன. தினமும் கல்லூரி, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய சிம்பிள் நகைகள் முதல், தீபாவளி பார்ட்டிகளில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கிராண்ட் டிசைன்கள் வரை எல்லாமே அணிவகுக்கின்றன.
வழக்கமான ரவுண்ட், ஓவல் ஷேப்புகளைத் தாண்டி, நெற்றித் திலகம் போன்ற கஸ்டம் திலக் வடிவம், காத்தாடி போன்ற பட்ட வடிவம், அறுகோணம், எண்கோணம் எனப் புதுமையான வெட்டுகளில் அமைந்த வண்ண ரத்தினக் கற்கள் இதில் ஜொலிக்கின்றன.தினமும் கல்லூரி, அலுவலகத்திற்கு அணிந்துச் செல்ல க்யூட்டான ஸ்டட்ஸ் மற்றும் வண்ணப் பதக்கங்கள். விரல்களில் மாற்றி மாற்றி அடுக்கிக்கொள்ளும் ஸ்டேக்கபிள் மோதிரங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஏற்ற போல்டான காக்டெய்ல் ரிங்க்ஸ்.
கழுத்தில் நளினமாக தவழும் லாரியட் நெக்லஸ்கள் போன்றவை கவனத்தை ஈர்க்கின்றன. நாடு முழுவதும் உள்ள 320-க்கும் மேற்பட்ட மிஆ பை தனிஷ்க் ஷோரூம்களில் சென்று வாங்கலாம்