• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு வெள்ளைபிள்ளையார் திருக்கோவில்

March 9, 2019 www.findmytemple.com

சுவாமி : வெள்ளைபிள்ளையார்.

தலச்சிறப்பு : பிள்ளையார் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார். பிள்ளையார் முதன்மைக் கடவுள் ஆவார். பிள்ளையாருக்கு ஆண்டுந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி அன்று விநாயக சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

தல வரலாறு : கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது மஞ்சளைத் திரட்டி ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். சிவபெருமான் உள்ளே செல்ல தடை விதித்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்து வருமாறு கூறினார். சிவபெருமானின் பூதகணங்கள் முதலில் பார்த்து ஒரு யானையை. எனவே சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். யானையின் தலையை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார் என்பது புராண வரலாறு ஆகும்.

நடைதிறப்பு : காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் இரவு 06.00 மணி வரை.

திருவிழாக்கள் : விநாயகர் சதுர்த்தி.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : அருள்மிகு வெள்ளைபிள்ளையார் திருக்கோவில்,

திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க