• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா!

May 29, 2026 தண்டோரா குழு

தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் கீழ் 2019 இல் நிறுவப்பட்ட கேஎம்சிஹெச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (KMCH IHSR), தமிழ்நாட்டில் ஒரு முன்னணி மருத்துவக் கல்லூரியாக விளங்குகிறது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, மே 28, 2026 வியாழன் அன்று கோயமுத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்ஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிய முதல் கார்ப்பரேட் மருத்துவமனை என்ற பெருமையை கேஎம்சிஹெச் பெற்றுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரி, தற்போது எம்.பி.பி.எஸ் படிப்பில் ஆண்டுக்கு 150 என்ற எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்க்கிறது. மேலும் 10துறைகளிலும் 39 மாணவர்களுடன் முதுநிலை கல்வியும் நடைபெற்று கொண்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதையும் கல்வி கற்பதற்கான சிறந்த வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும், நன்கு பயிற்சி பெற்ற மற்றும் திறமையான மருத்துவ வல்லுநர்களை உருவாக்குவதையும் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. மேலும், 750 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையானது மருத்துவக் கல்லூரியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விரிவான பயிற்சியும், அனுபவமும் கிடைக்கிறது.

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்,

இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்று மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவதற்கு தயாராக இருப்பது மிகுந்த பெருமையையும் நம்பிக்கையையும் அளிப்பதாகத் தெரிவித்தார். இந்த மாணவர்கள் நோயாளிகளை மையமாகக் கொண்ட மருத்துவ சேவைகளை வழங்கி, எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

சச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.ரவி கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மருத்துவம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது ஒரு சேவை என்றும், நோயாளிகளை சகமனிதராகக் கருதி, அவர்களுக்கு இரக்கத்துடனும் நேர்மையுடனும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கேஎம்சிஹெச் துணைத் தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி இரண்டாவது பட்டமளிப்பு விழா மருத்துவ மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கேஎம்சிஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் என்.பழனிசாமி, இந்த இரண்டாவது பட்டமளிப்பு விழாவானது கேஎம்சிஹெச் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கள் என்று குறிப்பிட்டார்.

நமது நாட்டின் அதிகரித்து வரும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய, திறமையான மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதே இந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கியதற்கான முக்கிய நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க