• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் – குன்றத்தூர்

September 18, 2017 findmytemple.com

சுவாமி : சுப்பிரமணிய சுவாமி.

அம்பாள் : வள்ளி, தெய்வானை.

தீர்த்தம் : சரவணபொய்கை தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் இந்த ஊரில் தான் அவதரித்தார். மலை அடிவாரத்தில் சேக்கிழாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் என ஏதேனும் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். அதே போல், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்றால், இங்கு வந்து தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, “இது உன் குழந்தை, நீதாம்பா காப்பாத்தணும்” என்று சொல்லி முருகனுக்குத் தத்துக் கொடுத்து, வழிபட்டுவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றால், கந்தக் கடவுள் அந்தக் குழந்தையைக் குறையின்றிக் காப்பார் என்பது நம்பிக்கை.

தல வரலாறு : முருகன் திருத்தணி கோவிலுக்கு செல்லும் முன் இந்த இடத்தில் சிவ லிங்கத்தை பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அதன் வரலாறு இதோ! தாரகாசுரன் என்ற அரக்கன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் தலத்தில் நடந்த சண்டையில் தாராசுரன் என்னும் அசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் மனம் அமைதி பெற திருத்தணி தலம் நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையை பார்த்ததும் முருகன் அங்கு அமர்ந்தார். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் ஆயிற்றே! சில காலம் அந்த மலையில் தங்கி இருந்த முருகன், குன்றத்தூரில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் “கந்தழீஸ்வரர்” என்ற பெயரில் தனி கோவில் கொண்டு இப்போதும் அருள் பாலித்து வருகிறார். முருகன் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. சில காலம் கழித்து முருகன், இத்தலத்தில் இருந்து புறப்பட்டு சென்று திருத்தணியை அடைந்ததாக தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

வழிபட்டோர் : சேக்கிழார், குலோத்துங்க சோழன்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

புதுவருடப் பிறப்பு,

ஆடிக் கிருத்திகை,

கார்த்திகை தீபம் மற்றும் அனைத்து கிருத்திகை நாட்களிலும் தரிசிப்பது விசேஷம் தரும்.

கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

குன்றத்தூர், சென்னை – 600 069, காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க