• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்!

April 27, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஏனெனில் அவருக்கு வயது 25 வயதேயாகும்.

இடது கை சுழற்பந்து வீச்சாளராக 2015-ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற ஜாபர் அன்சாரி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்விளையாடத் தொடங்கினார். அதன் பின் கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார்.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி சில ஆண்டுகளே ஆன நிலையில் அன்சாரி திடீரென்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.

இது குறித்து ஜாபர் அன்சாரி கூறுகையில்,

” 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். ஏழு ஆண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட் வீரராக வலம் வந்தேன். தற்போது என் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தற்போது நான் எடுத்துள்ள இந்த முடிவு பலருக்கும்ஆச்சர்யத்தைத் தந்தாலும், கிரிக்கெட் என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்பதை நான் முதலில் இருந்தே தெளிவாக இருந்தேன் என்றார்.

மேலும்,கிரிக்கெட் தவிர்த்து என் வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.அடுத்ததாக சட்டத்துறையில் நுழைய எண்ணம் உள்ளது. ஆகையால் அதில் சாதிக்க இப்போதில் இருந்து ஆரம்பிப்பது சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிஅணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க