• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வானதி சீனிவாசனுக்கு ‘ஐ லவ்யூ’ சொன்ன நபருக்கு ரூ. 500 அபராதம் !

September 18, 2016 தண்டோரா குழு

தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபருக்கு 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் 66வது பிறந்த நாளையொட்டி நேற்று கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், அக்கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

அப்போது,கையில் பூங்கொத்துடன் ஒருவர் வானதியுடன் புகைப்படம் எடுக்க வந்தார்.ஆனால் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் வானதியின் கையில் பூங்கொத்து கொடுத்து தனது காதலை தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு வானதி சீனிவாசனும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்நபரை கட்சி நிர்வாகிகள் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்நபரின் பெயர் முத்துவேல் என்றும், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.மேலும், முத்துவேல், பாஜக உறுப்பினர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக வானதி சீனிவாசன் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் பொது இடத்தில் அத்து மீறுதல், அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப்பிரிவுகளில் முத்துவேல் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முத்துவேல் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது. இதையெடுத்து அபராதத் தொகையை கட்டிய முத்துவேல் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க