• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினிக்கு வில்லானாக நடிக்க ஏன் மறுத்தேன் கமல் விளக்கம்

May 28, 2016 தண்டோரா குழு.

சங்கரின் எந்திரன் 2.0 படத்தில் நான் ஏன் ரஜினிக்கு வில்லானாக நடிக்கவில்லை என்பதற்கு உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் இயக்குனர் சங்கர் சூப்பர் ரஜினியை வைத்து முதலில் சிவாஜி படம் எடுத்தார். பின்னர் ரஜினியை வைத்து எந்திரன் படத்தை இயக்கினர் அப்படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினியே நடித்திருந்தார் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தற்போது சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது எந்திரன் 2.0. இந்தப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முதன் முதலில் நடிகர் கமல்ஹாசனிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் கமல் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஏதோ சில காரணங்களால் மறுத்து விட்டாராம். ஆனால் படத்தில் வில்லனாக நடிக்கப் பெரிய நடிகர்களையே அணுகி வந்தார் ஷங்கர்.

இதன் பின்னர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷ்நெக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்திய சங்கர், அவர் கேட்ட சம்பளம் மற்றும் கடும் நிபந்தனைகள் காரணமாக பின்வாங்கினார். இதனை தொடர்ந்து அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனிடம் கதை கூறியுள்ளார் சங்கர். ஆனால் கதை கேட்ட கமல் சில நாட்கள் கழித்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் தற்போது அந்த வேடத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வில்லன் வேடம் என்பதால் மறுக்கவில்லை. நாங்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தவர்கள்தான். ரஜினிக்கும் எனக்கும் இடையில் அன்பான, எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டுமானால் படத்தை நானோ அல்லது அவரோ தான் தயாரிக்க வேண்டும் என கமல் விளக்கமளித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் எந்திரன் 2.0 படம் 2017ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க