• Download mobile app
18 Apr 2026, SaturdayEdition - 3720
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமிக்கு ‘CAHO மெடாலியன் ஆஃப் ஹானர்’ கெளரவ விருது!

April 18, 2026 தண்டோரா குழு

இந்திய மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படும் ‘CAHOCON 2026’ மாநாட்டில் கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்களுக்கு, அவரது சிறந்த தலைமைப் பண்பைப் பாராட்டி ‘CAHO மெடாலியன் ஆஃப் ஹானர்’ (CAHO Medallion of Honour) விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்ற ‘CAHOCON 2026’ தொடக்க விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. மருத்துவத் துறையில் அவர் ஆற்றியுள்ள ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAHO) இந்த உயரிய விருதை அவருக்கு வழங்கியுள்ளது.

தொலைநோக்கு பார்வையுடன் மருத்துவத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடு, நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கனிவான, பாதுகாப்பான மருத்துவச் சூழலை உருவாக்கியது ஆகிய காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

CAHO அமைப்பின் 10வது சர்வதேச மாநாடு ஏப்ரல் 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. தெற்காசியாவிலேயே முதல்முறையாக நடத்தப்படும் ‘ISQua’ மண்டல மாநாடு இது என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இதில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட இந்தியா மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலில், கேஎம்சிஎச் மருத்துவமனை இன்று 2,250 படுக்கைகளுடன் தென்னிந்தியாவின் முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் இந்த மருத்துவமனை, சமீபத்தில் கோயம்புத்தூரில் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த ஒரு முக்கியப் பயிலரங்கத்தையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க