• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஆடி சிறப்பு சலுகை; வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தல்

July 23, 2026 தண்டோரா குழு

ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் போன்,வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, ஸ்மார்ட் போன்,வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்கள் கவிதை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு,தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்களை வழங்கும் இந்தத் திட்டத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி,கோவையில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது.இதில் தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தங்க நாணயங்களை வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஆடி மாத சிறப்பு சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஸ்மார்ட் போன் , வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் சிறந்த விலையில் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தங்க நாணயத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இந்த முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது, என்றார்.

மேலும், முதல் கட்டமாக கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க