• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆண்களை அடிக்கும் பெண்கள். உ.பி யில் கொண்டாட்டம்.

July 2, 2016 தண்டோரா குழு

ஹோலி என்றால் நமக்குத் தெரிந்தது எல்லாம் நாயகன் படத்தின் அந்திமழை மேகம் பாடலை போல அனைவரும் வண்ண வண்ண சாயத்தை மற்றவர் மீது பூசிக் கொண்டும், சாயம் கரைத்த நீர்த் தொட்டிகளில் தள்ளிவிட்டும் விளையாடுவார்கள் என நினைத்திருக்கிறோம். அல்லது கொண்டாடியும் இருப்போம்.

ஆனால், வீதிகளில் ஆண்களை ஓடவிட்டுத் துரத்தி துரத்தி தடியால் அடித்துக் கொண்டாடப்படும் ஹோலியை நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டது உண்டா?. குளிர்பானம் என்ற பெயரில் போங்கு என்னும் ஒரு வகையான மதுப்பனத்தை அளித்து அவர்களைத் தடுமாற வைத்து குதுகலமாக ஒரு ஹோலி பண்டிகை கொண்டாடுகின்றனர் இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.

உத்திரபிரதேசத்தில் அமைந்திருக்கிறது பர்சானா என்னும் மாவட்டம் தான் அது. இந்த மாவட்டத்தில் தான் ஆண்களைப் பெண்கள் தடியால் அடித்து ஹோலி கொண்டாடும் வினோத முறை பின்பற்றப்படுகிறது.

வண்ண, வண்ண பொடிகளை மற்றவர் மீது தூவியும், சாயம் கலந்த நீரை ஊற்றியும் ஹோலி பண்டிகை வட இந்தியாவில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பர்சானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் லத்மார் ஹோலி கொண்டாட்டத்தின் போது அந்த மாவட்டத்தின் ஆண்களை லத்தியால் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தக் கொண்டாட்டம் பர்சானா மாவட்டத்தில் இருக்கின்ற பிரபல ராதா ராணி கோவிலில் இருந்து துவங்கப்படுகிறது. பிறகு அங்கிருக்கும் சாலை, தெருக்களில் வண்ணம் பூசி, தடியால் ஆண்களைத் துரத்தி அடித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர். தண்டா என்னும் குளிர்பானத்தை ஆண்களுக்குப்
பருக தரப்படுகிறது. இதனால் போதை ஏற்பட்டு ஆண்கள் தடுமாறுவதும் உண்டு.

ஒட்டுமொத்தமாக இது மன அழுத்தம் குறைக்க உதவுகிறது எனச் சுற்றுவட்டார மக்கள் தெரிவிக்கின்றனர். பர்சானா மாவட்ட மக்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னரே இந்த லத்மார் ஹோலி
கொண்டாட்டத்திற்கு தயாராகத் துவங்கி விடுகிறார்கள். மாமியார்களும் கூட அவர்களது மருமகள்களுக்கு ஆரோக்கிய உணவை அளித்து ஊக்கமளிக்கின்றனர்.

லத்மார் ஹோலி பண்டிகையின் பின்னணியில், கிருஷ்ணரின் சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது. கிருஷ்ணர் தனது மனைவியின் சொந்த ஊரான பர்சானாவிற்கு வந்த போது ராதா மற்றும் ராதையின் தோழிகள் மீது வண்ணப் பொடி தூவிச் சீண்டுகிறார். தங்கள் மீது வண்ணப் பொடி தூவி கிருஷ்ணன் சீண்டுவதை அடுத்து பெண்கள் கிருஷ்ணனைத் தடி எடுத்துக் கொண்டு அடிக்கத் துரத்துகின்றனர்.

இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த லத்மார் ஹோலி பண்டிகை பர்சானா மாவட்டத்தில் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுவதற்காகவும் தான் இந்த லத்மார் ஹோலியை மறவாமல் கொண்டாடி வருவதாக பர்சானா மாவட்டத்தின் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க