• Download mobile app
18 Oct 2026, SundayEdition - 3903
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற பள்ளி குழந்தைகள் மீது இருசக்கர வாகனம் மோதிப் பலி

August 11, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பொன்நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் குழந்தைகள் அன்பரசு, பிரியா இவர்கள் தேவிகாபுரம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்வதற்காக பொன்நகர் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது ஆம்பூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பள்ளி குழந்தைகள் பிரியா மற்றும் அன்பரசு இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆம்பூரைச் சேர்ந்த ஸ்ரீகன் கவலைக்கிடமான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சோதரிகளான இரு குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க