• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்து 10 பேர் பலி

December 7, 2017 தண்டோரா குழு

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை நெடுஞ்சாலையின் ஓரத்தில் புதன்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் போர்வெல் லாரி ஒன்று நின்றுள்ளது. அதுசமயம் நாகர்கோவில் தெற்கு குளம் பகுதியிலிருந்து திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த டெம்போ வேன் ஒன்று எதிர்பாரத நிலையில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் நசுங்கிய நிலையில் லாரியில் மாட்டிக்கொண்டது. இதில் வேனில் பயணம் செய்த 5 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளுடன் சிக்கி கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் பொக்லைன் இயந்திரம் உதவி கொண்டு வேனின் பகுதிகளை உடைத்து நசுங்கி இருந்த வேனில் சிக்கிய இருந்தவர்கள் வெளியே கொண்டு வந்தனர்.அதில் பயணம் செய்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 சிறுவர் சிறுமிகள் உட்பட 10 பேர் இச்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் கல்யாண் மற்றும் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க