• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியாவில் காவேரி குழுமத்தின் 3 புதிய தயாரிப்புகள் அறிமுகம்

August 7, 2026 தண்டோரா குழு

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் ‘Interio & Exterio – Build Expo 2026’ கண்காட்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
ஆகஸ்ட் 7 முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஹால் ‘B’ பகுதியில் காவேரி குழுமத்தின் புதிய அரங்கு திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவேரி குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் லயன் வினோத் சிங் ரத்தோர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ்.மாருதி,சிபகா (CEBACA) தலைவர் பி.ரவிச்சந்திரன், ஃபைரா தேசியச் செயலாளர் லயன் எஸ். செந்தில்குமார், கோசினா (COZCENA) தலைவர் இ.வி.பி. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு காவேரி குழுமத்தின் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தனர்.

காவேரி குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் லயன் வினோத் சிங் ரத்தோர் பேசுகையில்,

“காவேரி குழுமம் கோவை கவுண்டம்பாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக ஏழு வண்ணங்களில் வாட்டர் டேங்குகளை அறிமுகப்படுத்தினோம்” என்றார்.தற்போது நடைபெறும் கண்காட்சியில் காவேரி குழுமத்தின் மூன்று புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதில் முக்கிய தயாரிப்பாக ‘Starship Anti-Microbial’ அதிநவீன தண்ணீர் தொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி 7 அடுக்கு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மை கொண்ட இந்தத் தொட்டி ISO தரச் சான்று பெற்றதுடன், 15 ஆண்டுகள் மாற்று உத்தரவாதமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்ததாக, கட்டுமானப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட Heavy Duty Construction Hose அறிமுகப்படுத்தப்பட்டது. 3/4 அங்குலம் மற்றும் 1 அங்குல அளவுகளில், 30 மீட்டர் நீளத்தில் கிடைக்கும் இந்தக் குழாய்கள், கட்டுமானப் பணிகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு அதிக வலிமையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதிக உறுதியுடன் உருவாக்கப்பட்ட Super Strong Electric Bike தயாரிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக அழுத்தம் மற்றும் வளைவுகளையும் தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காவேரி குழுமத்தின் புதிய தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என லயன் வினோத் சிங் ரத்தோர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க