• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத நாள் இன்று

June 25, 2016 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் கபில்தேவ் தலைமையிலான அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற தினம் இன்று.

கடந்த 1983ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி உலகக்கோப்பை இறுதி போட்டியில் பலம்பொருந்திய மேற்கிந்திய தீவுகள் அணியை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாய்ட் இந்திய அணியை முதலில் பேட் செய்ய கேட்டுக்கொண்டார். இதையெடுத்து வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்களில் ஸ்ரீகாந்தை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றி பெறுவதற்கு எளிதான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

உலகக்கோப்பை போட்டியில் மேற்கு இந்தியதீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களைப் போல் இந்திய அணி பலமாக இல்லாமல் இருந்தாலும் அன்றைத் தினம் இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் விஸ்வரூபம் எடுத்தனர்.

இதனால், இந்திய அணி நிர்ணயித்த 183 ரன்களை எடுக்க முடியாமல் திணறி மேற்கிந்திய தீவுகள் அணி 142 ரன்களில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சாலும் கபில்தேவின் சிறந்த வழிகாட்டுதலினாலும் இந்திய அணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்று உலகக் கோப்பையை முதன் முதலில் தன்வசமாக்கியது.

அதன் பிறகு 29 ஆண்டுகளுக்குப் பின் தான் தோணி தலைமையிலான இந்திய அணி 2011ல் மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனாலும் 1983ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் திருப்புமுனையாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி இன்று நாம் அனைவரும் ஆவலோடு பார்த்துவரும் ஐ.பி.எல் மேட்ச் தான் நம்முடைய வீரர்களின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம். அந்த ஐ.பி.எல் உருவாகக்காரணம் கபில்தேவ் தான் என்றால் யாராலும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசைப் பலமுறை கேட்டும் அவர்கள் வெளிநாட்டு வீரர்களுடன் நம் வீரர்கள் விளையாட வாய்ப்பு வழங்கும் உள்ளூர் போட்டிகளை நடத்த வாய்ப்பு வழங்கவில்லை. உதாரணமாக இங்கிலாந்து வீரர்கள் கவுண்டி மேட்ச்சில் விளையாடித்தான் மற்ற நாடுகளின் வீரர்களை எளிதில் சமாளித்து வந்தனர்.

அதே போல இந்தியாவிலும் அணிகளை அமைத்து விளையாடக் கோரிக்கை வைத்த கபில்தேவை கிரிக்கெட் வாரியம் உதாசீனப்படுத்தியது. பின்னர் அவரே ஒரு பல அணிகளை உருவாக்கினார். அதையும் தடுத்த அரசு, அந்த அணியில் விளையாடுபவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என வீரர்களை மிரட்டினர். பின்னர் பலத்த பிரச்சனைகளுக்குப் பின்தான் ஐ.பி.எல் துவங்கப்பட்டது.

அதன் பின்னரே புதிய புதிய கிரிக்கெட் வீரர்கள் உருவானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கபில்தேவ் ஓரம்கட்டப்பட்டிருந்தாலும் இந்திய அணையின் அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கபில்தேவ் தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படிப்பட்ட வீரருக்கு அவர் உலகக்கோப்பை பெற்றுத்தந்த நாளில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் படிக்க