• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை மாணவர்கள் கண் முன் சரமாரியாக அடித்த இளைஞர்கள்!

October 22, 2018 தண்டோரா குழு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக உள்ளார்.இவர் ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவியை சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.அப்போது,மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில்,விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறந்ததும் 150க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது வகுப்பறையில் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் வகுப்பில் இருந்த மாணவர்கள் முன் அவரை சரமாரியாக தாக்கினர்.இதையடுத்து,தலையில் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க