• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி கல்வி நிறுவனத்தில் ‘கோட் கிளப் 2026’ (COAD CLUB) போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் தொடக்க விழா!

June 18, 2026 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி ஹெல்த் சயின்சஸ் கல்வி நிறுவனங்கள் (PSG Health Sciences Institutions) சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பான ‘கோட் கிளப் 2026’ (COAD CLUB – Club of Anti-Drug) தொடக்க விழா பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ்.ஆர் (PSG IMSR) கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன்,IPS மற்றும் கோவை வடக்கு துணை காவல் ஆணையர் N.தேவநாதன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இவர்களுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காகவும் 500 கிலோமீட்டர் தூரம் தொடர் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்த சாதனையாளர் ஜி.டி. விஷ்ணு ராம் அவர்களுக்கு விழாவில் சிறப்பான முறையில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.

​இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ‘கோட் கிளப் 2026’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டதுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பிரத்யேக ‘பெண்கள் பாதுகாப்பு SOS செயலி’ (Women Safety SOS App) அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை மற்றும் போஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க