• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்க்கு ‘காதொலி கருவி’ அனுப்பி வைத்த சமூக ஆர்வலர் மணி

June 17, 2026 தண்டோரா குழு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு காதொலி கருவி (செவிட்டு மெஷின்) அனுப்பி சமூக ஆர்வலர் மணி நூதன முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் தினந்தோறும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகக் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விஜய் முன்பு உரத்த குரலில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் கதறல்கள் அவரது காதுகளுக்கு எட்டவில்லையா என்ற கேள்வியை எழுப்பினார்.

இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், “குழந்தைகள், பெண்கள் மற்றும் பெற்றோரின் வேதனைக் குரல்கள் உங்களுக்கு கேட்கவில்லை என்றால், சமூக நலன் கருதி இந்த காதொலி கருவியை அனுப்புகிறேன். இதன் உதவியுடன் நடிகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ மக்களின் குரலுக்கு செவிசாய்த்து உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத நீங்கள், நடுநிலையோடு மக்களுக்கு பணியாற்ற முடியுமா?” என்ற கேள்வியையும் மனுவில் எழுப்பியிருந்தார்.
இதையடுத்து, காதொலி கருவியுடன் கூடிய பார்சலை கோவை தபால் நிலையம் மூலம் முதல்வர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் மணி அனுப்பிவைத்தார். இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க