• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

September 14, 2016 தண்டோரா குழு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரை நியமித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த ஜூன் 25ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். மூன்று மாதங்களை கடந்தும் புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி டெல்லியில் இன்று அறிவித்துள்ளார்.

பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை நியமித்த சோனியா காந்திக்கும், ராகுலுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேலிடத்தில் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என்றார்.

மேலும், இனி கட்சியில் கோஷ்டி பூசல்கள் இருக்காது எனக் கூறிய அவர் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் நிதானம் இழக்கக் கூடாது’ எனக் கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த விஜயதரணி,பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரும் திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்ததை வரவேற்றுள்ளனர்.

திருநாவுக்கரசர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கினார். பின்னர் பாஜகவில் இணைந்த அவர் பாஜக ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். பின்னர் 2012ல் காங்கிரஸ்சில் இணைந்த அவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேரும் முன் பாஜகவில் கட்சியின் உறுப்பினராக இருந்த காரணத்தால் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திருநாவுக்கரசை தலைவராக நியமிக்கக்கூடாது என்று கடந்த ஜூலை மாதம் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க