• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் ராக்கர்ஸ் மீது முதல் முறையாக போலீஸார் வழக்குப்பதிவு

December 11, 2017 தண்டோரா குழு

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதன் முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழில் எந்த ஒரு புதிய படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், அடுத்த சிலமணி நேரத்தில் அதனை உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டு விடும். இதனால் தமிழ் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில், இப்படை வெல்லும் படத்தை அனுமதியின்றி தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ராஜசேகரன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதன் முறையாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க