• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 2 ம் தேதி முதல் தமிழகத்தில் மழை

November 30, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலால் டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அப்படி வரும் போது நவம்பர் 30 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று செவ்வாய்க்கிழமை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
“அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். புயலுக்கு நாடா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

நாடா புயல் கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும். புதுச்சேரிக்கு அருகே தென்கிழக்கே வங்கக் கடலில் 730 கி.மீ அருகே புயல் மையம் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க