• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.டி.எமில் பணம் எடுக்க முடியாததால் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞருக்கு உதவி-சுஷ்மா ஸ்வராஜ்

October 11, 2017 தண்டோரா குழு

ஏ.டி.எமில் பணம் எடுக்க முடியாமல் ரஷ்ய இளைஞர் காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் இவாஞ்சலின் (24). இவர் கடந்த செப்.24-ம் தேதி இந்தியா வந்துள்ளார். இந்நிலையில்,(அக் 10) செவ்வாய் காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சில கோயில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோயிலுக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கச் சென்றார்.

அப்போது,அவரது PIN நம்பர் லாக் ஆகிவிட பணம் எடுக்க முடியாமல் தவித்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த அவர் கோயில் வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடனடியாக வந்து இவாஞ்சலினை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்ததில் அவை அனைத்தும் உண்மையாக இருந்தது. அதன் பிறகு அவருக்கு காவல்துறையினா் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரஷ்ய தூதரகத்தை நாடி உதவி கோருமாறு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க