• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா ஸ்வராஜ்

November 16, 2016 தண்டோரா குழு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள்‌ அவரைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ள அவர், “சிறுநீரக கோளாறு காரணமாக நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன். தற்போது டயாலிசிஸ் நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது உடல்நிலை குறித்து நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இதனைப் பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க