உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன். இவரது திருமணம் குறித்து சமூகவலைத்தளத்தில் வதந்திகள் பரவின. இதற்கு ஜாலியாக ஒரு டுவீட் போட்டுப் பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
மலையாள பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு, கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு, சூர்யாவுடன் எஸ் 3 என பிசியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனின் திருமணம் பற்றி சமூக வலைத்தளதங்களில் வதந்தி பரவிவருகிறது. அதில் ஸ்ருதிஹாசனும், நடிகை அசினைப் போல் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்யவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஸ்ருதியின் திருமணம் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகை சுருதிஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் சிரிப்பு ஸ்மைலிக்களை போட்டு. வேற? என நகைச்சுவையாக டுவீட் செய்துள்ளார். தந்தையைப் போலவே இவரும் எந்த வதந்தியைப் பற்றியும் கவலைப் படாதவர் நடிகை ஸ்ருதிஹாசன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்