• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புகை பிடித்தால், சிகை மழித்தால் வாக்களிக்க முடியாது.

May 9, 2016 தண்டோரா குழு

சிகையை மழித்தவர்களும், தாடியைத் திருத்தவோ அல்லது மழிக்கவோ செய்தவர்களும், புகைபிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும், சிக் குருத்துவாரா பிரபந்தக் கமிட்டியின் (SGPC) பொறுப்பாளர்களை நியமிக்க வாக்களிக்க முடியாது என்ற சட்டத்திருத்தம் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தம் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியின் ஒப்புதலோடு அமுலாக்கப்பட்டது.

இந்த புதிய திருத்தம் 91 ஆண்டுகளாக ஹரியானா, ஹிமாசல்பிரதேஷ், பஞ்சாப், ஆகிய மாநிலங்களிலிருந்த சட்டத்தை மாற்றியுள்ளது என்று நிர்வாகக் குறிப்பு கூறுகிறது.

சிக் குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி (SGPC) என்பது சீக்கிய இனத்தின் நன்மையையும், மேன்மையையும், ஆலயப் பராமரிப்பு போன்ற அந்தச் சமூகத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனிக்கும் ஒரு அமைப்பாகும்.

1925 ம் ஆண்டு குருத்துவாரா சட்டப்படி ஒவ்வொரு சீக்கியரும் 21 வயதுக்குப் பின் SGPC அமைப்பின் பொறுப்பாளர்களை நியமிக்க வாக்களிக்கலாம் என்பது விதி.

சீக்கியர்களில் ஒரு சிலர் தங்களது சிகையையும், தாடியையும் மழிக்கும் வழக்கமுள்ளவர்கள். அவர்கள் சஹஜ்தாரி சிக்ஸ் என்று அழைக்கப்படுவர்.

இவர்கள் சீக்கிய மதக்கோட்பாட்டின் படி உண்மையான சீக்கியர்கள் அல்ல என்பது பழமைவாதிகளின் கருத்து. ஆனால் பழைய சட்டப்படி இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.

1944 ம் ஆண்டு சிக் மன்றக் குழுவின் பொறுப்பாளர்களை நியமிக்கும் வண்ணம் வாக்களிக்க சஹஜ்தாரி சிக்ஸ்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விசேஷ சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பதும் சீக்கியர்களின் கோரிக்கை.

சஹஜ்தாரி சிக்ஸ்களுக்கு வாக்களிக்க மற்றும் வாக்காளர்களாகவோ உரிமை அளிக்கக் கூடாது என்பது சீக்கியரின் வெகு நாளையக் கோரிக்கை.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் படி இவ்வகை சீக்கியர்களும், புகை பிடிப்பவர்களும் மது அருந்துபவர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யவே மறுக்கப்படுவர்.

இந்த சட்டத் திருத்தம் 2016 ராஜ்ய சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் மார்ச் 15ம் தேதி கொண்டுவரப்பட்டு. அடுத்த நாள் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு ஏப்ரல் 25ம் தேதி மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன் சீக்கியர்களின் வெகு நாளைய இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருத்தம் 2003 அக்டோபர் 8 ம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்டதாகக் கணக்கெடுக்கவேண்டும் என்றும் அரசாணை கூறியுள்ளது.

மேலும் படிக்க