• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிரியா புத்தகத்தால் தேன்நிலவு பயணத்தில் அதிர்ச்சியடைந்த பெண்

August 6, 2016 தண்டோரா குழு

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் தன்னுடைய தேனிலவுக்காக துருக்கி சென்றார். ஆனால் பாதுகாப்புப் படையினர் அவருக்கு மறக்க முடியாத வேதனையைக் கொடுத்து விட்டனர். சிரிய நாட்டு இலக்கியம் குறித்த புத்தகத்தை விமானத்தில் படித்ததுதான் அவர் செய்த தவறு.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல மேற்கத்திய நாடுகளுக்கு எதைப் பார்த்தாலும் தீவிரவாத பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அதில் லேட்டஸ்டாக சிக்கிக் கொண்டவர்தான் இந்தப் பெண்.

பைசா ஷாஹீன்(27) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. தேனிலவுக்காக துருக்கி செல்லத் திட்டமிட்டார் ஷாஹீன் தம்பதியினர். இதையடுத்து விமானம் மூலம் இவர்கள் துருக்கிக்கு பயணமானார். அங்குச் சென்று விட்டு தாயகம் திரும்பிய ஷாஹீனுக்கு தெற்கு யார்க்ஷயரில் உள்ள டன்காஸ்டர் விமான நிலையத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு அவரைத் தடுத்து நிறுத்திய இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள், நீங்கள் விமானத்தில் படித்த புத்தகம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. உங்களைத் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அவரை விடுவித்தனர். ஷாஹீன் செய்த தவறு, தனது விமான பயணத்தின் போது, சிரியா பேசுகிறது கலை மற்றும் கலாச்சாரத்தின் துவக்கம் என்னும் நூலைப் படித்தது தான். சிரிய நாடு தொடர்பான புத்தகத்தைப் படித்ததால் அவர் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்ற அச்சமும், சந்தேகமும் பாதுகாப்புப் படையினருக்கு வந்து விட்டது. இதனால் அவரை விசாரித்துள்ளனர்.

இது குறித்து ஷாஹீன் கூறுகையில், பாதுகாப்பு என்பது அவசியமானது தான். ஆனால், சந்தேகப்படுவதற்கு ஒரு அளவில்லையா? புத்தகம் படிப்பது கூடத் தவறா? நான் என்னுடைய தேனிலவு நாட்களை நினைத்து மகிழ்வதை விட இந்தச் சம்பவம் குறித்து அதிகம் எண்ணி வேதனை தான் அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், தான் படித்த புத்தகம் இங்கிலீஷ் பென் (English PEN) என்னும் விருதைப் பெற்றது. கடந்த மே மாதம் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்ட் ஆங்கில இலக்கிய விழாவில் அந்தப் புத்தகம் தனக்குப் பரிந்துரை செய்யப்பட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க