• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மணல் குவாரி தடை உத்தரவு தொடரும் – உயர்நீதிமன்றம்

January 19, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு விதித்த தடைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூடவேண்டும், புதிதாக மணல் குபாரிகளை திறக்க கூடாது, கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூடவேண்டும் என்று அதிரடியாக உத்திரவிட்டார்.மேலும், தேவைப்பட்டால் அரசே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து 3 மாவட்ட ஆட்சியர்களின் மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும், நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் மணல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க