• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதன் முறையாகக் கண் அறுவை சிகிச்சை செய்த ரோபோ

September 12, 2016 தண்டோரா குழு

ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக ஐக்கிய ராஜ்யத்தின் மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பிரிட்டன் தேசத்தை சேர்ந்த பில் பியவர்(70) என்னும் பாதிரியாரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படலம் வளர்ந்திருந்தது. இதனை, இயந்திர மனிதனை வைத்து வெளியே எடுத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அந்நபரின் கண் பார்வை மீண்டும் திரும்பியுள்ளது.

அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ள ஜான் ராட்க்ளிப் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளனர்.

மேலும், கண் அறுவை சிகிச்சையில் புதிய அத்தியாயத்தை அந்த அறுவை சிகிச்சை ஏற்படுத்தியிருப்பதாக ஆக்ஸ்போர்டில் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பேராசிரியர் ராபர்ட் மேக்லாரென் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே முதன் முறையாக ரோபோவை பயன்படுத்தி இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியான பில் பியவர் கூறுகையில், கண் பார்வையை மீட்டெடுக்க இயந்திர மனிதனைப் பயன்படுத்தி இருப்பது தேவதை கதைகளில் வருகின்ற நிகழ்ச்சியைப் போல உணர்கிறேன் என்று மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க