• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நதிநீர் இணைப்புக்காக பணம் கொடுத்துக் காத்திருக்கும் ரஜினி

June 27, 2016 தண்டோரா குழு

நதிநீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் நிதி அப்போதே வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாகவும் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ரஜினி தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் உடல்நிலை குறித்து சமூகவலைத்தளத்தில் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி பூரண உடல் நலத்துடன் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் ரஜினி இந்தியா திரும்ப உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கபாலி சிறப்பாக தயாராகி உள்ளதாகவும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நதி நீர் இணைப்புக்காக ரஜினி அளித்த ஒரு கோடி நிதி குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ரஜினி கொடுப்பதாக உறுதியளித்த ஒரு கோடி ரூபாய் நிதி அப்போதே வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாகவும், அரசு நதி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கும் போது அந்த நிதி உரியவர்களிடம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க