• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூபாய் நோட்டுகளை முன்கூட்டியே அச்சடித்திருந்தால் கறுப்புப் பணம் வைத்திருப் போருக்குத் தெரிந்திருக்கும் – வைகோ

November 28, 2016 தண்டோரா குழு

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை முன்கூட்டியே அச்சடித்திருந்தால் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத் தகவல் தெரிந்திருக்கும்.அதனால் தான்,அமைச்சரவைக்குக் கூட பிரதமர் தெரிவிக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.

இது குறித்து வைகோ , சென்னை விமான நிலையத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு அறிவித்தபோது தமிழகத்திலேயே முதல் ஆளாக நான்தான் அவரது நடவடிக்கையை வரவேற்றேன்.

அதன் பிறகே மற்ற தலைவர்கள் மோடியின் அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால், ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர்கள் தற்போது எதிர்க்கிறார்கள்.

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது உண்மையே.ரூபாய் 500, 1000 நோட்டுகளை முன்கூட்டியே அச்சடித்திருந்தால், அது குறித்த தகவல் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு எப்படியாவது தெரிந்திருக்கும். அதனால் தான் அமைச்சரவைக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது அவர்களின் உரிமை. பிற கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை.ஆனால், பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றேன்.

மேலும் படிக்க