• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கந்து வட்டி கேட்டு சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

January 8, 2018 தண்டோரா குழு

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவர் தனது மனைவி விஜயலட்சுமி தனது மகள் கீர்த்தனா மற்றும் மகன் ஹரிஹரனுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் 6 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக அதேபகுதியை சேர்ந்த தனியார் வாகன உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம், 50 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கியதாகவும், அதனை திரும்ப செலுத்திய போதும் மேலும் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்பந்திப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பணம் கேட்டு மிரட்டி வரும் மணிகண்டன் குடும்பத்தினர், தனது மகன் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறிய அவர், அன்னூர் காவல் துறையினர் மணிகண்டனுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.இந்நிலையில் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜயலட்சுமி வலியுறுத்தினார்.

மேலும் படிக்க