• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு ரூபாய் சந்தா கட்டினால் பத்து லட்சம் காப்பீட்டுத் தொகை. ரயில்வே துறை அறிவிப்பு

July 29, 2016 தண்டோரா குழு

இந்தியன் ரயில்வேயின் துணைநிறுவனம் IRCTC. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம். இதன் பணி உணவு மற்றும் சுற்றுலா சம்பந்தமான வேலைகளையும், கணினி மூலம் பயணச் சீட்டு விண்ணப்பிப்போர்க்குச் சீட்டு வழங்குதல் போன்றவையாகும்.

IRCTC ஒரு சிறந்த காப்பீட்டுத் திட்டத்தை அமுல் படுத்த உள்ளது. ரயிலில் பயணம் செய்வோர் விருப்பப்பட்டால் ஒரு ரூபாய் சந்தா செலுத்துவதின் மூலம் பத்து லட்சம் காப்பீட்டுத் தொகை பெறலாம் என்பதே. இது செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணச்சீட்டு பதிவு செய்யும் போதே சந்தா கட்டவும் முடியும். ஏற்கனவே இது போன்ற ஒரு காப்பீட்டுத் திட்டம் அமுலில் இருந்தாலும் துணை நகர்ப்புறங்களுக்கும் இது அமுல் படுத்தப்படவுள்ளது.

பத்து லட்சம் இறப்பிற்கும், நிரந்தர முழுமையான குறைபாடுகளுக்கு 7.5 லட்சம், பகுதி குறைபாடுகளுக்கு 2 லட்சம், மருத்துவமனை செலவிற்கு 10,000 ரூபாய் இறந்த உடலை எடுத்துச் செல்ல அல்லது ரயில் விபத்தில் காயம்பட்டோரை உரிய இடத்திற்குக் கொண்டு செல்ல அல்லது தீவிரவாதத்தாக்குதலோ, வழிப்பறியோ, கலகமோ, கலவரமோ, துப்பாக்கிச் சூடோ, நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இவை அனைத்தும் 1989ம் ஆண்டு ரயில்வே விதி 123, 124, 124A பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படும்.

ICICI லொம்பர்ட் ஜெனெரல் இன்சுரன்ஸ், ராயல் சுந்தரம், ஷ்ரிராம் ஜெனெரல், போன்ற நிறுவனங்களும் IRCTC உடன் இணைந்து செயலாற்றுகின்றன.

எந்த நிகழ்வும் உடனுக்குடன் இந்நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதிக பட்சமாக 4 மாதங்கள் அனுமதிக்கப்படும். அவற்றைப் பரிசீலித்து உரியத் தொகையை 15 நாட்களுக்குள் கிடைக்குமாறு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு, பயணியால் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக நிர்வாகச் செலவினங்கள் போக மீதித் தொகை அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். அச்சமயம் இந்த சந்தாத் தொகையும் திருப்பி அளிக்கப்பட்டு விடும் என்றும் IRCTC அறிவித்துள்ளது.

மேலும் படிக்க