• Download mobile app
13 May 2021, ThursdayEdition - 1919
FLASH NEWS
  • 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
  • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

உடலசைவை வைத்து இசையை வெளிப்படுத்தும் கருவி.

June 21, 2016 தண்டோரா குழு

நீங்கள் இதுவரை யாரேனும் எனது உடலில் இசை தரும் பாகம் இல்லை எனக் கவலைப்பட்டுக் கூறியதைக் கேட்டதுண்டா? இனி கவலை வேண்டாம். ஏனெனில் வளர்ந்து வரும் தொழிநுட்பம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.

அதாவது இனி வருங்காலத்தில் எவர் வேண்டுமானாலும் தமது உடலில் சங்கீதம் இசைக்கும் பாகத்தினைக் கொண்டிருக்க முடியும்.

இசைக் கலைஞர் ஜான் பியெட்ர் என்பவர் இதற்கான சிறிய மின்னணு உபகரணங்களை உருவாக்கியுள்ளார். அதாவது இந்த உபகரணங்களை அணிந்து கொள்பவர்கள் தமது விரலைச் சிறிது அசைப்பது அல்லது பாதங்களை நிலத்தில் தட்டுவதன் மூலம் இசைக்கருவிகளின் சப்தங்களை அழகாக வெளிக்கொண்டுவர முடியும். மனித உடல் பாகங்களின் இயற்கையான அசைவை உணர்ந்து இசையை உருவாக்கும் இத்தொழிநுட்பத்தை சப்த உள்ளுணர்வுக் கருவி என அழைக்கின்றனர்.

ஜானுக்கு இந்த ஐடியா எயின்டோவென் டிசைன் அக்கெடமியில் பட்டப் படிப்புக்கான ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் போது தோன்றியுள்ளது. அதாவது ஒரு மனிதன் இசையை மீட்ட வேண்டுமெனில் ஏதேனும் ஒரு இசைக்கருவியின் தன்மைக்கேற்ப தனது உடலை அசைத்துப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் திருத்தமான இசையை வெளிப்படுத்த முடியும்.

ஆனால் இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணிய அவர் இந்தச் சிறிய மின்னணு உபகரணங்களை உருவாக்கியுள்ளார். இவற்றின் மூலம் சங்கீதம் இசைக்க உடலைக் கடும் முயற்சி செய்து பழக்கப்படுத்த வேண்டியதில்லை.

ஒரு புல்லாங்குழல் வாசிப்பவர் தனது விரல்களைக் கட்டி ஆள வேண்டும். டிரம் செட் வாசிப்பவர் கைகளுக்கு முறையான நெறிப்படுத்தலைச் செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மின்னணு உபகரணங்களை இசைப்பதற்குக் கலையுணர்வுடன் இயற்கையான உடலசைவுகளை மேற்கொண்டாலே போதும். சிரமப்பட்டு பயிற்சி செய்ய வேண்டிய தேவையிருக்காது.

இந்த மின்னணு உபகரணங்களில் ஒன்று கையின் அசைவினை சென்சார் மூலம் உணர்ந்து அதற்கேற்ற இசையை வெளியிடும். தொட வேண்டிய தேவை கூட இல்லை.

இதே போல் கை விரல்களில் அணியப்படும் சாதனம் ஒன்று விரல்களை மடித்தல் அல்லது இலேசாகத் தொடுதல் மூலம் வெவ்வேறு வகையான சப்தங்களை வெளிப்படுத்தும். இதே போன்றது தான் கால் மற்றும் கால்விரல்களுக்கு மாட்டப்படும் சாதனங்களும் உண்டு.

இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் நெஞ்சில் அணிந்து கொள்ளக் கூடிய சென்சார் ஒன்று நமது இதயத் துடிப்பை உணர்ந்து அதை டிரம், கை தட்டும் ஓசை அல்லது நாம் விரும்பிய வடிவத்தில் கணினியுடன் இணைக்கப்பட்ட ப்ரோக்கிராம் மூலம் மாற்றி வழங்கக் கூடியது.

இந்த மின்னணு இசை உணர்வுக் கருவிகள்யாவும் MIDI கன்ட்ரோல்லெர்களால் இயக்கப்படுவதுடன் லேப்டொப் அல்லது கணினியுடன் இணைக்கப்பட்டு இசை வடிவங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். வருங்காலத்தில் இசையின் புதிய பரிணாமமாக வளர்ந்து வரும் இந்த மனித உடல் அசைவு சென்சார் கருவிகள் இன்னும் சில காலத்தில் பிரசித்தமாகி விடும் வாய்ப்பு நிரம்பவே உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க