• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் இரண்டு லட்சம் பணம் கொள்ளை

August 29, 2016 தண்டோரா குழு

காஞ்சிபுரம் அருகே விற்பனை பணத்தை எடுத்துச் சென்ற டாஸ்மாக் மேலாளரைத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம்,அச்சிறுப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக இருப்பவர் தீனதயாளன்.இவரது வீடு சேப்பாக்கத்தில் இருப்பதால் இரவில் மது விற்பனை பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு விற்பனை முடித்துவிட்டு,சேப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விற்பனையாளர் மணியுடன் சென்றுள்ளார்.

இதையடுத்து அவர்களைப் பின் தொடந்த வந்த மூன்று மர்ம நபர்கள் அவர்களின் வாகனத்தை மறித்து கீழே தள்ளிவிட்டு,அவர்கள் வைத்திருந்த இரண்டு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து இவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதையடுத்து இரவு நேரத்தில் வசூலாகும் பணத்தை வங்கிகள் நேரடியாக வந்து கடையிலேயே வாங்கும் வசதியைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் படிக்க