• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெஹ்பூபா முஃப்டி குழம்பிய ஆன்மா-சமய குருக்களின் விமரிசனம்.

July 2, 2016 தண்டோரா குழு

ஜம்மு & காஷ்மீரின் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்டி ஆத்திரமூட்டும் கொள்கைகளாலும், ஆட்சேபனைக்குரிய நடவடிக்கைகளாலும் காஷ்மீர் மக்களைச் சுவரின் மீது தள்ளுகிறார் என்று மத குருமார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மத குருமார்கள் தங்கள் பிரசங்கத்தில் ஆர்டிக்கிள் 370 பற்றியும், ஹண்ட்வரா பகுதியில் ராணுவப் படைவீரர் ஒருவரால் பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் பற்றியும் விவாதித்ததை முதலமைச்சர் பரிகசித்து விமரிசனம் செய்ததற்கு குருமார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போது அவற்றைப் பற்றிய கருத்துக்களை கூற மதகுருமார்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு. டால் ஏரியின் சுற்றுச் சூழல் பற்றியும், அதைப் பாதுகாக்கப்பட வேண்டியதைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தக் குருமார்களின் உதவித் தேவைப்படும் போது, முக்கியமான அரசியல் முடிவெடுக்கையில் மதகுருமார்களைப் புறக்கணிப்பதேன்? என்று இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டால் ஏரியைப் பற்றியும் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப்பற்றியும் மற்ற சமூக பிரச்சனைகளைப் பற்றியும் அன்றாடம் விவாதித்து வருவதாகவும், வாழ்க்கை நெருக்கடிப் பிரச்சனை ஏற்படுமாயின் முன்னவை இரண்டாம் பட்சமாகிவிடும் என்று தலைமை குரு மிர்வாய்ஸ் உமர் ஃவரூக் கூறியுள்ளார்.

விரட்டப்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் குடியேற கலப்புக் குடியிருப்புகள அமைப்பது, முன்னாள் வீரர்களுக்குத் தனி குடியிருப்புகளை அமைப்பது, மற்றும் ஜம்மு & காஷ்மீரில் வாழும் ஹிந்து சமுதாயத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது போன்ற முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்டியின் கொள்கைகள் காஷ்மீர் மக்களை வாயிலற்ற மூலைச்சுவரில் மோத வைக்கும் என்று குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். ஹண்ட்வாரா கற்பழிப்பிற்கு முன்பும் பின்பும் பல இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன, அவையனைத்திலும் பொதுமக்கள் தொடர்புடையவர் ஆவர்.

அவற்றைப்பற்றி கருத்து எதுவும் குருமார்கள் தெரிவிக்காதது ஏன்? என்று முஃப்டி கேள்வி எழுப்பியுள்ளார். சீருடை அணிந்த வீரர்கள் தொடர்பிருந்தால் மட்டுமே குருமார்கள் கேள்வி எழுப்புவார்களா என்றும் வினா எழுப்பியுள்ளார். மசூதியில் அமர்ந்து கொண்டு ஆர்டிகிள் 370ஐப்பற்றி முழுவதும் அறியாமலேயே வினா எழுப்பும் இவர்களுக்கு நதியும்.

மலையும், காடும் மக்களின் வாழ்க்கைக்கு எத்துணை அவசியம் என்பதை சிந்திக்கத் தெரியவில்லை என்றும் முஃப்டி பேசியுள்ளார். மேடையேறி பிரசங்கம் செய்யும் இவர்கள் என்றேனும் மடிந்து கொண்டிருக்கும் டால் ஏரியின் உண்மை நிலையைப் பற்றி மக்களுக்கு உணர்த்தியிருப்பார்களா? காக்கும் வழியினைப் பற்றி ஆலோசித்திருப்பார்களா? என வினவியுள்ளார். பாஜக வுடன் தனது கூட்டணி, தந்தை முகமது சையத்ன் தீர்மானம் என்றும் அதில் தனக்கு எந்தவிதமான அபிப்ராயபேதமுமில்லை என்றும், இது ஆயிரம் மடங்கு காஷ்மீர் மக்களின் அமைதிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க