• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மைக்கேல் ஜாக்சன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வெளியிடப்பட்டது.

June 23, 2016 தண்டோரா குழு

மறைந்த முன்னால் பிரபல பாடகர் மைகேல் ஜாக்சன் வசித்து வந்த அமெரிக்காவில் மேற்கு மாநிலமாக நெவாடாவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து ஆபாச பொருள்கள் கைப்பற்றப்பட்டது.

மைக்கேல் ஜாக்சன் பிரபலமான பாடகராக இருந்து சமாதித்ததை விட அதிகமாகச் செலவு செய்து இறுதிக் காலத்தில் கடனாளியாக உயிரிழந்தார். அதே சமயம் அவர் உயிருடன் இருந்தபோது அவர்மீது பல பாலியல் புகார்களும் எழுந்தது.

குறிப்பாக அவர் சிறுவர்களுடன் தவறான உறவைக் கொண்டிருந்தார் எனப் புகார் எழுந்தது. ஆனால் அது அவர்மீது பொறாமை கொண்டவர்கள் கொடுத்த புகார் என கருதப்பட்டது. ஆனாலும்
அந்தப் புகாரின் அடிப்படையில் அவரது ஆடம்பர பங்களாவில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்திருந்தன.

அவருடைய படுக்கை அறை மற்றும் குளியல் அறையில் இருந்து இளைஞர்களின் முழு நிர்வாண படங்களும் பாதி நிர்வாண படங்களும் கைப்பற்றப்பட்டது எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சேகரிக்கப்பட்ட பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது அந்தப் படங்கள் அனைத்தும் 1,800ம் ஆண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் நிர்வாண படங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை ராடார் ஆன்லைன்.காம் என்ற நிறுவனமே முதலில் வாங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய அதிகாரி ஒருவர் ஜாக்சன் போதை மருந்து, மற்றும் செக்ஸ் பைத்தியம் பிடித்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க இரத்தம், மிருக பலி, முதிர்ந்த பாலியல் செயல்களைக் காட்டியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்சன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆபாச பொருள்கள் இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் கருவிகள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவனுடைய இசை அறையில் சிறு பிள்ளைகளின் நிர்வாண புத்தகம் ஒன்றும், படுக்கை அறையில் பல ஓரினச் சேர்க்கையாளர்களின் நிர்வாண படங்களும் புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை நடந்துகொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில், ஜாக்சன் புற்றுநோயில் இருந்து குணமடைந்த கவின் அறிவிசோ என்னும் 13 வயது இளம் பெண்ணை பாலியல் கொடுமை தந்ததாக மைக்கேல் ஜாக்சன் மீது புகார் செலுத்தப்பட்டது.

ஆனால் ஜாக்சன் மீது செலுத்தப்பட்ட ஏழு குழந்தைகள் வன்கொடுமை குற்றம் மற்றும் இளம் வயதுடையவர்களுக்கு மது பானம் தந்ததற்காக இரண்டு குற்றங்களில் இருந்து ஜாக்சன் 2005ல் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க