• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் மீதான வக்கிரத்தைக் கட்டவிழ்த்து விடும் வட மாநில பத்திரிக்கைகள்

May 25, 2016 தண்டோரா குழு

இந்தியா என்பது மிகப்பழமையான நாகரீகத்தைக் கொண்டது. அந்த நாகரீகத்தில் பெண்கள் என்பவர்கள் கடவுள்களாகப் பார்க்கப்பட்டனர். பழங்காலத்தில் வீட்டு நிர்வாகம் மற்றும் தொழிலில் அவர்களது பங்கு அதிகமாக இருந்தது. தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாகப் பல அவதாரங்களை எடுக்கும் பெண்களை மக்கள் மதித்து நடந்தார்கள்.

ஆனால் பிற்காலத்தில் மேலை நாட்டுக் கலாச்சாரம் வந்த பின்பு அதே பெண்கள் போகப்பொருளாகப் பார்க்கப்பட்டனர். சமவுரிமை என்ற பெயரில் அவர்கள் தங்களை தவறான முறையில் முன்னிறுத்திப் பல பெண்களின் மனதைக் காயப்படுத்திய சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. இதன் உச்சபட்சமாக தற்போது வட மாநில பத்திரிக்கைகள் பெண்கள் என்றாலே ஒரு போகப்பொருள் என்று வருணிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாகப் பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்கள் யார் அழகு என போட்டி வைப்பது, தற்போது பொறுப்பான பதவியில் இருப்பவர்களின் ஆரம்பக்கால புகைப்படங்களைப் பிரசுரித்து அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது என பல்வேறு கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தற்போது நாட்டில் இருக்கும் ஐ.எ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் முதல் 11 அழகானவர்கள் யார் என ஒரு சர்வேயை எடுத்து ஒரு வட மாநில இணையப் பத்திரிகை ஒன்று பிரசுரம் செய்தது. இதையடுத்து அந்த இணையப்பத்திரிகை மீதான விமர்சனம் அதிகரித்தது. குறிப்பாகக் கேரள மாநிலம் மூணாறில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மெரின் ஜோசப், இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ஐ.எ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் மிகவும் திறமையான பலர் உள்ளனர். குறிப்பாகப் பெண் அதிகாரிகள் பலர் திறமையாகப் பணியாற்றி வருகின்றனர்.

நல்லவர்கள், கெட்டவர்கள் மற்றும் மிகவும் மோசமானவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்து தன்னுடைய கடமையில் இருந்து தவறாமல் சிறப்பாக பணியாற்றக் கூடிய பலர் இருக்கையில் அழகான பெண் அதிகாரி எனப் பட்டியல் வெளியிட்டது அவர்களது ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. பெண் அதிகாரிகளை இதைவிடக் கேவலப்படுத்த முடியாது என தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அஸ்ஸாம் பா.ஜ.க அரசில் அங்கூர்லதா தேகா என்ற முன்னாள் நடிகை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தற்போது அவரைப் பற்றி செய்தி வெளியிடும் பல செய்தி நிறுவனங்கள் அவருடைய கடந்த கால போட்டோக்களை பிரசுரித்து மிகக் கவர்ச்சியான எம்.எல்.எ எனச் செய்தி வெளியிட்டுள்ளனர். இது இந்தியா முழுவதும் பரவி வருகிறது.

இந்தச் செய்தியில் அவர் ஆரம்பக் காலத்தில் திரைப்படத்திற்கு நடிக்க வருவதற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஆல்பத்தில் இருந்தும் போட்டோக்கள் எடுத்து பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. இது பெண்கள் எவ்வளவு முன்னேறினாலும் அவர்களை ஒரு போகப் பொருளாக பார்க்கும் சமுதாயம் எப்போது தான் மாறுமோ என்ற கவலை தற்போது பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க