• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் மணிரத்தினம் அலுவலகத்தில் தீ விபத்து

August 9, 2016 தண்டோரா குழு

ரோஜா, தளபதி, நாயகன், கடல், ராவணன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர் மணிரத்தினம். இவர், ஆழ்வார் பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் வசித்து வருகிறார்.

மணிரத்தினம் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை ஆழ்வார் பேட்டையில் மூன்று தளங்கள் கொண்ட அவரது வீட்டில், தரைதளத்தின் கீழே மணிரத்தினம் புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றை அமைத்து வருகிறார்.

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை, அவருக்குச் சொந்தமான மெட்ராஸ் டாக்கீஸ் டப்பிங் தியேட்டரில் உள்ள ஏசி மிஷின் திடீரென தீப்பிடித்ததில், தீ மளமளவெனப் பரவி எரிய ஆரம்பித்தது.

டப்பிங் தியேட்டரில் உள்ள தொழில்நுட்ப கருவிகளும் தீயில் கருகியது. இதைப்பார்த்த அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் உடனடியாக தீயணைப்புதுறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவிகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க