• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொலைக்காட்சி தொடர்களால் கிளம்பிய ஊர் பிரச்சனை

August 22, 2016 தண்டோரா குழு

தமிழில் வெளிவந்த நீ வருவாயென என்ற படத்தில் ரமேஷ்கண்ணா ஒருவரிடம் ஜாதி பற்றி கேட்பார் உடனடியாக பேச்சு வளர்ந்து சண்டையாக மாறி அது ஊர் கலவரமாக மாறும்.ஆனால் வங்காளதேசத்தில் ஊர் கலவரம் வரக் காரணமாக இருந்தது ஒரு டிவி தொடர் என்று நினைக்கும் போது அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை,என்பது மட்டும் உண்மை.

வங்காளதேசத்தில் பிரபல டி.வி. சேனல் ஒன்றில் “கிரன்மாலா” என்ற பெயரில் அறிவியல் சார்ந்த புனை கதை, தொடர் நாடகமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்திய படைப்பான இந்த நாடகத்துக்கு வங்காளதேசத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

வங்காள மொழியில் ஒளிப்பரப்படும் இந்த நாடகம் தீய சக்திகளிடம் இருந்து மனிதர்களைக் காப்பாற்றும் இளவரசி பற்றியதாகும்.

இந்த நிலையில் ஹபிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள டோல் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு உள்ள டீ கடையில் அமர்ந்து “கிரன்மாலா” தொடரை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த 2 பேர் இந்த டி.வி. தொடர் குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது.அதனைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்படவே இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டைகளாலும், கத்திகளாலும் தாக்கிக்கொண்டனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களைக் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தனர்.இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் அவர்களை விரட்டி அடித்தனர்.

இந்த மோதலில் சுமார் 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அவர்களில் 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே தொடர் நாடகதத்தால் கடந்த ஆண்டு, வங்காள தேசத்தில் 2 சிறுமிகள் தங்களுக்கு “கிரன்மாலா” இளவரசி அணிந்திருப்பது போன்ற உடைகள் வேண்டும் என அவர்களது பெற்றோரிடம் கேட்டுள்ளனர்.ஆனால் அவர்களது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுமிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் படிக்க