• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த தாய் யானையைச் சுற்றிவரும் குட்டியால் சோகம்.

July 5, 2016 தண்டோரா குழு

கோவையை அடுத்துள்ள நரசீபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் இன்று பெண் யானை ஒன்று உயிரிழந்தது. அதன் குட்டி யாரையும் அதனருகே நெருங்கவிடாமல் கண்ணீருடன் சுற்றி வருகிறது.

கோவையை அடுத்துள்ள நரசீபுரம் அருகே உள்ள வைதேகி நீர் வீழ்ச்சி பகுதியில், கடந்த ஒரு வார காலமாக உடல் நலக்குறைவுடன் பெண் காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் சுற்றி வந்தது. இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்குச் சிகிச்சை வழங்க வனத்துறையினர் முற்பட்டனர்.

ஆனால் அந்த யானை அங்கும் இங்கும் சுற்றி வந்ததாலும் ஆக்ரோசமாக இருந்ததாலும் சிகிச்சை வழங்க முடியாமல் வனத்துறையினர் தடுமாறி வந்தனர். இந்நிலையில் இன்று வரமுங்கில் பள்ளம் என்ற இடத்தில் அந்தப் பெண் யானை உயிரிழந்து சடலமாக காணப்பட்டது.

அதன் அருகே அதனுடைய 5 வயது மதிக்கத்தக்கக் குட்டி ஆண் யானையொன்று கண்ணீருடன் சுற்றி வருகிறது. பல மணி நேரமாக இறந்த யானையை விட்டு அகலாமல் அந்தக் குட்டி யானை ஆவேசத்துடன் பிளிறிக் கொண்டேயிருக்கிறது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த யானையின் உடலை மீட்டு இறந்த காரணத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் இறந்த கிடக்கும் பெண் யானையின் உடலை நெருங்க விடாமல் அந்த குட்டியானை சடலத்தை ஆவேசத்துடன் சுற்றி வருகிறது.

மேலும், குட்டி யானை வனத்துறையினரைத் தாக்குவதுபோல ஆவேசமாக அருகில் வந்து விரட்டியடிக்கிறது. இதனால் இறந்த தாய் யானையின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இறந்த யானையின் அருகில் குட்டி யானை கண்ணீருடன் நடத்திடும் பாசப்போராட்டம் காண்பவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குட்டி யானையை அங்கிருந்து வேறு இடத்துக்கு அனுப்பிய பிறகுதான் யானையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், இறந்த பெண் காட்டு யானைக்கு 30 வயது இருக்குமெனவும், உடல் நலக்குறைவினால் யானை இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 5 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க