• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழு உடல் நலத்தோடு இருக்கிறேன் – வைரமுத்து

December 7, 2016 தண்டோரா குழு

அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மை இல்லை. தான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலமானார். அவரை அடுத்து அப்பல்லோவில் இருந்த பத்தரிகையாளர் “சோ” எஸ். ராமசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகின.

“வைரமுத்துவும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளார், அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை” என்பது போன்ற செய்தி பரவியது. ஆனால், இதை வைரமுத்து மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் புதன்கிழமை கூறியிருப்பதாவது;

ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.

நான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது அன்பும், அக்கறையும் கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க