• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் வேகமாகப் பரவும் நாய் சண்டை

May 25, 2016 தண்டோரா குழு

இந்தியா முழுவதும் பல்வேறு வகையான விலங்கு சண்டைகள் பழங்காலத்தில் நடைபெற்றன. குறிப்பாகச் சேவல் சண்டை, குதிரைச் சண்டை, எருமை சண்டை மற்றும் ஆட்டுச் சண்டை என பல்வேறு சண்டைகள் நடைபெற்றன. ஆனால் அவை அனைத்தும் தற்போது அவை அனைத்தும் விலங்கு நல வாரியம் மற்றும் விலங்குகள் நல அமைப்பினரால் தடை செய்யப்பட்டன. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது சேவக்காட்டு எனப்படும், சேவல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக வளைகுடா நாடுகள் மற்றும் மேலை நாடுகளில் இருந்து ஒரு புதிய பழக்கம் இந்தியாவில் பரவத் துவங்கியுள்ளது. அது நாய் சண்டை. இதில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட வகை நாயை லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து வாங்கி அதைச் சண்டைக்கு எனவே பழக்குவார்கள். பின்னர் பணக்காரர்கள் மட்டும் பங்கேற்கும் ஒரு இடத்தில் அவர்களின் நாய்களுக்குள் சண்டையை விட்டு அதில் சூதாட்டம் ஆடுவதாகத் தகவல்கள் வெளி வருகின்றன.

ஹரியான மற்றும் இதர சில மாநிலங்களில் இலைமறை காய் மறையாக நடைபெற்று வந்த இந்த நாய் சண்டை தற்போது இந்திய தலைநகரான டெல்லியின் புறநகர் பகுதியில் நொய்டா மற்றும் குர்கோன் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. முன்பு பஞ்சாப் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் நடந்து வந்த இது போன்ற நிகழ்ச்சிகள் தற்போது நகர்ப்புறங்களிலும் நடக்கத் துவங்கிவிட்டன.
நாய் சண்டை மற்றும் அதற்குப் பந்தயம் கட்டுவது சட்டவிரோதம் என்பதால் இவை ரகசியமாக நடப்படுகிறது. இதைப் பணக்கார வட்டாரத்தில் நடைபெறுவதால் இதைக் குறித்து யாரும் அதிகமாக கண்டுகொள்வதும் இல்லை. இதைத் தடுக்கும் பொருட்டு இந்த விளையாட்டில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டும், இந்த விளையாட்டின் பெருமை குறையவில்லை.

இந்த விளையாட்டிற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இருந்து நாய்கள் இந்தியாவிற்கு கடத்தி வருகின்றனர். இது ஒரு சர்வதேச மோசடி ஆகும். பிட்ச்புல்ஸ், புல்டாக்ஸ் மற்றும் இந்தியன் மச்டிப்ப்ஸ் போன்ற உயர் ரக நாய்களுக்குப் பயிற்சி அளிக்க லட்சக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது.

இந்த பிரச்சினையை குறித்துப் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கேபினட் அமைச்சரான மேனகா காந்தி, தனக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தெரியும். நாய்களுக்குச் சரிவர உணவு வழங்காமல், அவற்றை அடித்து துன்புறுத்தப் படுகின்றன. சண்டையில் தோற்றுப் போகும் நாய்களை துப்பாகியால் சுட்டு கொலை செய்து விடுகின்றனர் அல்லது அவற்றைச் சங்கிலியால் கட்டி கால்வாய்களில் மூழ்கச் செய்துவிடுகின்றனர். இந்தச் சண்டைகளை அரங்கேற்றப் பண்ணை வீடுகளை உபயோகப் படுத்துகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சிகளை குறித்துக் காவல் துறை அதிகாரிகளுக்கு முன்பே தகவல் அளித்து விடுகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த நாய்களைக் கூண்டில் அடைத்து, சரிவர உணவு தராததால் பசியின் கொடுமை தாங்காமல் அவற்றை முரட்டுக் குணமுள்ளதாக மாற்றி விடுகிறார்கள். போட்டியில் எளிதில் தோற்காமல் இருக்க அவற்றின் காதுகளையும் வாலையும் வெட்டி விடுகிறார்கள். அவற்றுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியால் சண்டையிடும் போது அதிக மூர்க்கமான குணத்துடன் சண்டையிடும். ஜெயிக்கும் நாயின் மேல் லட்சக் கணக்கில் பந்தயம் வைக்கப்படுகிறது. சண்டையின் வேகத்தால் இரத்தம் சிந்தும் வேளையில் அந்தப் பந்தய பணம் அதிகரிக்கவும் செய்கிறது.

இது குறித்து பேசிய விலங்கியல் ஆர்வலர் சுஹி பட்டாச்சாரியா, இந்தச் சண்டை நிகழ்ச்சியைப் பார்த்து அதற்குச் சாட்சியாக அதைப் புகைப்படம் எடுத்தும் காணொளியாகவும் சேகரித்து அதை இணைய தளமான பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளோம், அவை தற்போது வைரலாக பரவி உள்ளது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள வாஜிரபாத் என்னும் இடத்தில் இது பிரபலமானது. ஜ்ஹஜ்ஜர் மாவட்டத்தில் இந்த நாய் சண்டை நடக்க இருப்பதாய் அறிந்து அதைக் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் இது சம்பந்தமாக சுரிந்தர் டாகர் என்பவர் கைது செய்தனர். ஆனால் இது ஒரு சர்வதேச மாஃபியாவை சேர்ந்தது என்பதால் அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நாய் சண்டைகளை ஒருங்கிணைப்பு செய்த மகேஷ் எனப்படும் விக்கி என்பவர் தலைமறைவாகி விட்டார் என்றும், தற்போது இந்தச் சூதாட்டம் அதிகரித்து உள்ளது என்றும் ஜ்ஹஜ்ஜர் காவல் துறை அதிகாரி ஸ்.பி. குமார் தெரிவித்தார். ஆனால், இதைக் குறித்து எந்தப் புகாரும் தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவரவில்லை என்று ஹரியாணா மாநிலத்தின் நிதி அமைச்சர் கேப்டன் அபிமன்யு தெரிவித்துள்ளார்.

ஜூன் 10, 2012 ல், பஞ்சாப் துணை முதல்வர், சுக்ஹ்பீர் சிங் பாதல் என்பவருக்கு இந்த பிரச்சினையை குறித்து மேனகா காந்தி கடிதம் எழுதினார். ஆனால், அவர் பதில் எதுவும் எழுதவில்லை. மீண்டும், இதைக் குறித்து ஜூலை 12, 2013 ல் பஞ்சாப் குற்றம் கிளைக்குத் தகவல் கொடுக்கப் பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் முக்கியமான நபர் இதில் சம்பதப்பட்டு உள்ளதால் என் வேண்டுகோளை நிராகரித்து விட்டனர். நாய்கள் சண்டைக்காக பிறந்த ஜீவன்கள் ஆகவே அதன் பிறந்த நோக்கத்தைத் தொடரட்டும். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று பஞ்சாப் நீதிபதி ஒருவர் கூறினார். பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஒன்றும் நடக்கப்போவது எந்த மாற்றமும் நிகழப்போவதும் இல்லை. அதனால் ஹரியாணா மாநிலத்தின் முதல் அமரச்சருடன் இதைக் குறித்து பேச முடிவு செய்து உள்ளேன். அங்கு புதிய அரசாங்கம் இருப்பதால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று மேனகா காந்தி தெரிவித்தார்.

மேலும் படிக்க