• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம் – முதல்வர் பழனிச்சாமி

July 28, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசின் சார்பாக மருத்துவ உதவிகள் கேட்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது.தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில்,சேலத்தில் செய்தியாளர்களை சந்ததித்த முதல்வர் பழனிசாமி,

“திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஐந்து முறை முதல்வராக இருந்தவர்,தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார்.அரசின் சார்பாக மருத்துவ உதவிகள் கேட்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க