November 6, 2026
தண்டோரா குழு
சோனி நிறுவனம் தனது சினிமா லைன் வரிசையில் எஃப்எக்ஸ் 5 என்ற புதிய ஃபுல்-ஃப்ரேம் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஃபுல்லி ஸ்டேக்டு சிமாஸ் இமேஜ் சென்சார் இடம்பெற்றுள்ளது. இது 15+ ஸ்டாப்ஸ் டைனமிக் ரேஞ்ச் டூயல் கெயின் ஷூட்டிங் மோட் மற்றும் மூன்று பேஸ் ஐஎஸ்ஓ செட்டிங்ஸ்கள் மூலம் சென்சிடிவிட்டி செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது. சினிமா லைன் எஃப்எக்ஸ் வரிசையில் முதன்முறையாக, இது ஓபன் கேட் ஷூட்டிங் மற்றும் சோனியின் காப்புரிமை பெற்ற RAW வடிவமான எக்ஸ்-ஓசிஎன் முறையில் இன்-கேமரா பதிவு செய்வதையும் ஆதரிக்கிறது.
மேலும்,இந்த கேமரா மூலம் 5கே வீடியோவை வினாடிக்கு 60 ஃபிரேம்கள் வரையிலும், 4கே வீடியோவை வினாடிக்கு 120 ஃபிரேம்கள் வரையிலும், எஃப்எச்டி வீடியோவை வினாடிக்கு 240 ஃபிரேம்கள் வரையிலும் படமாக்க முடியும்.திரைப்பட தயாரிப்பு சூழல்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சினிமா லைன் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கச்சிதமான மற்றும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய அமைப்பில் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஃப்எக்ஸ் 5 கேமராவுடன், சோனி இந்தியா நிறுவனம் கழற்றக்கூடிய ஓஎல்இடி வியூஃபைண்டர் மற்றும் எக்ஸ்எல்ஆர் ஹேண்டில் ஆகிய இரண்டு விருப்பத்தேர்வு பாகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எக்ஸ்எல்ஆர் ஹேண்டில் கேமராவிலேயே 96 கேஎச்இசட்/ 32-பிட் ஃப்ளோட் தரத்தில் ஆடியோவை பதிவு செய்ய உதவுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒளிப்பதிவாளர்கள் மற்றும் வீடியோ படைப்பாளர்களிடமிருந்து உயர் பாராட்டுக்களைப் பெற்ற சினிமா லைன் கேமராக்களின் உருவாக்கத்தின் மூலம் சோனி பெற்ற அனுபவமும் நிபுணத்துவமும் இந்த கேமரா அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
சோனி இந்தியாவின் இமேஜிங் மற்றும் ப்ரொபஷனல் சொல்யூஷன் பிரிவின் தலைவர் முகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “நவீன திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட எங்களின் சினிமா லைன் வரிசையில் எஃப்எக்ஸ் 5 கேமரா புதிய வரவாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஃபுல்-ஃப்ரேம் சென்சார், இன்டர்னல் RAW பதிவு செய்யும் திறன் மற்றும் எஃப்எக்ஸ் வரிசையில் முதன்முறையாக ஓபன் கேட் ஷூட்டிங் ஆதரவு ஆகியவற்றுடன், இது படைப்பாளர்களுக்கு இணையற்ற படைப்புச் சுதந்திரத்தையும் சினிமாத்தனமான வெளிப்பாட்டையும் வழங்குகிறது.
இமேஜிங் தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் சோனி எப்போதும் உறுதியுடன் உள்ளது. எந்தவொரு படப்பிடிப்பு சூழலிலும், படைப்பாளர்களின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் கருவிகளை அவர்களிடம் சேர்ப்பதற்கான எங்களது அர்ப்பணிப்பிற்கு எஃப்எக்ஸ் 5 கேமரா ஒரு சான்றாகும்.” எஃப்எக்ஸ் 5 மாடல் ரூபாய். 5,61,990 விலையிலும், எஃப்எக்ஸ் 5 பி மாடல் ரூபாய். 5,09,990 விலையிலும், டிவிஎஃப்- இஎல் 1 (ஓஎல்இடி கழற்றக்கூடிய வியூஃபைண்டர்) மாடல் ரூபாய். 1,05,990 விலையிலும் எக்ஸ்எல்ஆர்-எச்2 (எக்ஸ்எல்ஆர் ஹண்ட்ல் யூனிட்) மாடல் ரூபாய். 1,33,990 விலையிலும் கிடைக்கும்.