November 6, 2026
தண்டோரா குழு
இண்டஸ்இந்த் வங்கி தனது ‘லோன் உத்சவ்’ பிரசாரத்தின் கீழ் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன், தங்க நகைக் கடன் மற்றும் வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்குத் திருவிழாக்காலச் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்த விவரம் வருமாறு:
ரூ.10 கோடி வரையிலான வீட்டுக் கடனுக்கான லாகின் கட்டணம் ரூ.499 ஆகும்.இதேபோல் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டிற்கு 9.99 சதவீதம் முதல் துவங்குகிறது.இதற்கு ரூ.75 லட்சம் வரை கடன் வழங்குகிறது.சொத்து பிணையக் கடனாக ரூ.25 கோடி வரை வழங்கப்படுகிறது. பங்குகள்/பத்திரங்கள் பிணையக் கடன் ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகைக் கடனுக்கு பரிசீலனைக் கட்டணத்தில் 75 சதவீதமும் தங்க நகைக் கடன் 2 கோடி வரையும் வழங்கப்படுகிறது.
வணிகக் கடனுக்கு பரிசீலனைக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும், பிணையமில்லாக் கடனாக ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது.சிறு தொழில் வங்கிச் சேவைக்கு லாகின் கட்டணம் எதுவும் கிடையாது. இதற்கு ரூ.3 கோடி வரை வழங்கப்படுகிறது. வணிக வங்கிச் சேவைக்கு பரிசீலனைக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும் நடப்பு மூலதனக் கடன்கள் ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படுகிறது.வாகனக் கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய மற்றும் பழைய வாகனக் கடன்களுக்குக் சிறந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.அத்துடன் கூடுதல் வாகனக் கடன் சலுகைகள்,கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்,வசதிக்கேற்ப திருப்பிச் செலுத்தும் கால அளவு, விரைவான கடன் பரிசீலனை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இது குறித்து மேலும் விவரங்களை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள இண்டஸ்இந்த் வங்கி கிளையை அணுகி தெரிந்து கொள்ளலாம்.