• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் – காவேரி மருத்துவமனை

July 26, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக கருணாநிதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று அவரை சந்தித்த திமுக செயல் தலைவர் கலைஞர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது.தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.அதற்கு தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன.அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது.வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க