• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது – குலாம் நாபி ஆசாத்

July 28, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நாபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.இதையடுத்து இன்றும் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனையில் காங். மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத்,முகுல் வாஸ்னிக் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத்,

“கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க நானும்,முகுல் வாஸ்னிம் அவர்களும் சென்னை வந்தோம்.தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தோம்.கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவர் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும் சில தினங்களில் கருணாநிதி நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என நினைக்கிறேன்.
கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது.அவரது உடல் நிலை சரியாக பிரார்திக்கின்றோம்” எனக் கூறினார்.

மேலும் படிக்க