• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தருமபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை

November 19, 2018 தண்டோரா குழு

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதிகள் மூவரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள்,வன்முறைகள் நடைபெற்ற பின்பு அது கலவரமாக மாறியது.அப்போது நடைபெற்ற கலவரத்தின் போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணம் செய்த கொண்டிருந்த பேருந்து தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டி என்னும் இடத்தில் எரிக்கப்பட்டது.

அப்பொழுது பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவானி,காயத்ரி,ஹேமலதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.அதனை தொடா்ந்து இந்த வழக்கில் நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் மூவரும் துக்குதண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.அதனை தொடர்ந்து அவர்களின் துக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இவர்கள் மூவரும் நன்நடத்தையில் விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தனர்.ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தற்போது எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறனர்.இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர்.இதனை தொடர்ந்து ஆளுநர் இவர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவர்கள் மூவரும் வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க