• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

October 30, 2018 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 25ம் தேதியில் இருந்து 27ந் தேதி இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து இன்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 800க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைகளின் இருபுறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 30 நிமிடங்களுக்குப் பிறகு குண்டு கட்டாக ஒரு சிலரை தூக்கி காவல் துறையினர் கைது செய்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறுகையில்,

“தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் மதிய உணவு இல்லாமல் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.மேலும் சுய உதவிக்குழுக்களை வைத்து மதிய உணவு தயாரித்து வருவதாகவும்,தமிழக முதலமைச்சரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,தலைமை செயலகத்தில் அமைச்சர் தலைமையில் சத்துணவு அமைப்பின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்”.இவ்வாறு கூறினர்.

மேலும் படிக்க