• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நவ 26ம் தேதி புள்ளியியாளர் பதவிக்கான போட்டி தேர்வு

November 24, 2017 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியாளர் பதவிக்கான போட்டி தேர்வு நடைபெறுகிறது.

கோவையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியாளர் பதவிக்கான போட்டி தேர்வு (நவ 26)ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையும்,மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது.இத்தேர்வானது எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மகளிர் மேனிநிலைப் பள்ளி, தேவாங்கர் மேனிலைப்பள்ளி மற்றும் கோவை துணி வணிகர்சங்க அரசு மேனிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது.

மொத்தம் 878 தேர்வர்கள் எழுதும் இத்தேர்வினை கண்காணிக்க 3 முதன்மை கண்காணிப்பாளர்கள்,ஒரு மொபைல் அலுவலர்,3 வீடியோ கிராபர் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உரிய நேரத்திற்கு முன்னதாகவே நுழைவுச் சீட்டுடன் வர வேண்டும்.மேலும், தேர்வு அறைக்குள் மொபைல் போன் மற்றும் மின்னியக்க கருவிகளை எடுத்து வரக் கூடாது.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க